நேற்று 46 கொவிட் மரணங்கள் பதிவாகின: நுவரெலியாவில் 5 பேர் உயிரிழப்பு

நேற்று 46 கொவிட் மரணங்கள் பதிவாகின: நுவரெலியாவில் 5 பேர் உயிரிழப்பு

நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச கொவிட் மரணங்கள் நேற்று (22) பதிவாகின.

அதற்கமைய,  நேற்று 46 கொவிட் மரணங்கள் பதிவாகின.

சுகாதார பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மரணங்கள் கடந்த 16 ஆம்  திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றுள்ளன.

இதில் 36 மரணங்களுக்கு கொவிட் நியூமோனியா நிலைமையே காரணம் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை இடம்பெற்ற மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1,178 ஆக பதிவாகியுள்ளது.

இவ்வாறு மரணித்தவர்களில் 30 ஆண்களும் 16 பெண்களும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையின் அடிப்படையில் மீட்டியாகொட, பதுளை, காலி, பத்தேகம, பட்டபொல, வத்தளை, மினுவாங்கொட, கொழும்பு-15, குருநாகல், களுத்துறை, மாலபே, பயாகல மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் பேராதனை, கட்டுகஸ்தோட்டை, கந்தானை, மட்டக்குளி மற்றும் கரந்தெனிய ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையின் அடிப்படையில் ரத்கம, அக்மீமன பகுதிகளை சேர்ந்த தலா இருவர் மரணித்தனர்.

அத்துடன் நுவரெலியா மற்றும் கந்தப்பளை பகுதிகளில் மாத்திரம் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.