கொத்மலை பிரதேச உதவி காணி உரித்து நிர்ணய ஆணையாளர் கைது

கொத்மலை பிரதேச உதவி காணி உரித்து நிர்ணய ஆணையாளர் கைது

கொத்மலை பிரதேச உதவி காணி உரித்து நிர்ணய ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வன அழிப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான அவர், ஹட்டன் - கெலிஓயா பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.