சீனப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்ற இலங்கை மாணவர்களுக்கும் தடுப்பூசி

சீனப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்ற இலங்கை மாணவர்களுக்கும் தடுப்பூசி

சீன பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்ற இலங்கை மருத்துவ பீட மாணவர்களுக்கும் சைனோபார்ம் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை கருத்திற்கொண்டு பயண கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையிலும், தடுப்பூசி பெற்றுக் கொள்ள அந்த மாணவர்களுக்கு அனுமதி வழங்குமாறும், மேலும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக எந்தத் தடையுமின்றி மாகாணங்களுக்கு இடையில் அவர்கள் சென்று வருவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)