இன்றிரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4மணி வரை பயணக்கட்டுப்பாடு!

இன்றிரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4மணி வரை பயணக்கட்டுப்பாடு!

இன்றிரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4மணி வரையில் நாடு முழுவதும் நடமாட்டத்தடை விதிக்கப்படவுள்ளது.

அத்துடன் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் அன்றிரவு 11மணி வரையில் நடமாட்டத்தடை தளர்த்தப்படும்.

பின்னர் அன்றிரவு 11மணி முதல் 28ம் திகதி அதிகாலை 4 மணிவரையில் மீள நடமாட்டத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கடற்றொழில் துறை இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அத்துடன் மீன் மொத்த விற்பனை நிலையங்களை திறப்பதற்கு வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளன.

கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் விவசாயிகளின் உற்பத்திகளை பகிர்வதற்காக 7 பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைக்குமாறு விவசாய அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.