சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ரிப்பர் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ரிப்பர் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் - மணற்காடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட ரிப்பர் மீது  காவற்துறையின் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக  பருத்தித்துறை காவற்துறையினர் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது கட்டளையை மீறி பயணித்த குறித்த ரிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது அவ்வாகனத்தில் இரண்டு பேர் பயணித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.