மறு அறிவித்தல்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் வளிமண்டலவியல் திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை

மறு அறிவித்தல்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் வளிமண்டலவியல் திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை

நாட்டில் தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவுவதால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு அந்தமான் மற்றும் வங்காள விரிகுடாவின் வடகிழக்கு கடற்பகுதிகளில், தாழமுக்க நிலை காணப்படும்.

இதனால் மறு அறிவித்தல்வரை அந்த பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்றொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை நாட்டின் பல பகுதிகளில் காற்று வேகதாக வீசக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சிலப்பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைபெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.