பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பது தொடர்பான அறிவிப்பு!
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை மீண்டும் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.