கொத்மலை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 26 பேருக்கு கொவிட் தொற்று!

கொத்மலை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 26 பேருக்கு கொவிட் தொற்று!

கொத்மலை நியகங்தொர பகுதியில் உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 26 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அங்கு பணிப்புரிந்த 82 ஊழியர்களுக்கு முன்னதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொத்மலை பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர்கடளுடன் தொடர்பை பேணிய 90 பேருக்கு நேற்று பி.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அந்த பரிசோதனை முடிவுகளின்படி 26 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.