நாடுமுழுவதும் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்குமாறு கோரிக்கை (காணொளி)
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகள், கொவிட் பரவலை கட்டுப்படுத்த போதுமானதல்ல என்பதால், நாடுமுழுவதும் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்குமாறு இலங்கை மருத்துவர்கள் சங்கம் (SLMA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நாட்டில் 14 நாட்களுக்கு கடுமையான பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என கொழும்பு மருத்துவ பீடத்தின் சமூக வைத்திய திணைக்களத்தின் பேராசிரியர் மனுஜ் வீரசிங்கவும் நேற்று கோரியிருந்தார்.
கொவிட்-19 தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. இதனை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் வைத்திய நிபுணர்கள் அரசாங்கத்திற்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.