இராகலையில் உழவுவண்டி விபத்து: 21 தொழிலாளர்கள் காயம்! (படங்கள்)

இராகலையில் உழவுவண்டி விபத்து: 21 தொழிலாளர்கள் காயம்! (படங்கள்)

இராகலை, சென். லெனார்ட்ஸ் (நடுக்கணக்கு) பிரதேசத்தில், தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற  உழவு வண்டி (ட்ரெக்டர்) ஒன்று விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (21) காலை  இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேற்படி உழவு இயந்திரம், இராகலை, ஸ்டாபோட் பிரிவிலுள்ள 42 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு டிக்சன்கோனார் பிரதேசத்துக்கு பயணித்துள்ளது.

அதன்போது உழவு வண்டிக்கும், அதற்கு பின்னால் பொருத்தப்பட்டிருந்த பெட்டிக்குமான இணைப்புப் பகுதி உடைந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை காவல்நிலையத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.