இபலோகம காவல்நிலையத்தில் 15 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா
இபலோகம காவல்நிலையத்தில் 15 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றுறுதியாகியதை அடுத்து குறித்த காவல் நிலையத்தில் பணி புரிவதற்காக மேலதிக காவல்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றுறுதியான காவல்துறை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புடைய 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் காணப்படும் கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு தொற்றுநீக்கம் செய்யப்பட்டதன் பின்னரே புதிய காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.