கம்பஹா மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை

கம்பஹா மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்று உறுதியான 3623 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் நேற்று 761 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 493 பேருக்கும்,கொழும்பு மாவட்டத்தில் 218 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகலில் 265 பேருக்கும், காலியில் 275 பேருக்கும், மாத்தறையில் 106 பேருக்கும், கேகாலையில் 233 பேருக்கும், பதுளையில் 53 பேருக்கும், அம்பாறையில் 31 பேருக்கும், மாத்தளையில் 62 பேருக்கும், அநுராதபுரத்தில் 139 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

முல்லைத்தீவில் 77 பேருக்கும், மன்னாரில் 7 பேருக்கும், நுவரெலியாவில் 83 பேருக்கும், கண்டியில் 124 பேருக்கும், இரத்தினப்புரியில் 88 பேருக்கும், புத்தளத்தில் 94 பேருக்கும் தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் 203 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 87 பேரும், நெல்லியடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 78 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இது தவிர கிளிநொச்சியில் 74 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 151,343 ஆக உயர்வடைந்துள்ளது.
தொற்றிலிருந்து இதுவரையில் 122,367 பேர் குணமடைந்துள்ளனர்.

இதையடுத்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 27,925 ஆக அதிகரித்துள்ளது.