வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.
அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும்.
அத்துடன் வங்காள விரிகுடாவின் வடகிழக்கு பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.