நாளை மறுதினம் முதல் மீள் அறிவித்தல்வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

நாளை மறுதினம் முதல் மீள் அறிவித்தல்வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் மற்றும் கடல் பயணங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை வடகிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களை எச்சரித்துள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களில் எதிர்வரும் 23ஆம் திகதியளவில் தாழ் அமுக்கம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மன்னார் முதல் கொழும்பு ஊடாக காலி வரையான கடற் பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களில், காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.