மட்டக்களப்பு வாகன விபத்தில் ஒருவர் பலி ; மற்றொருவர் படுகாயம்

மட்டக்களப்பு வாகன விபத்தில் ஒருவர் பலி ; மற்றொருவர் படுகாயம்

மட்டக்களப்பு, காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று(18) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மகிழுந்தும், கல்முனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த உந்துருளியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் உந்துருளியில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மகிழுந்தில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.