களுத்துறை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நேற்று 300க்கும் அதிகமான தொற்றாளர்கள்!

களுத்துறை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நேற்று 300க்கும் அதிகமான தொற்றாளர்கள்!

நேற்றையதினம் களுத்துறை மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள மாவட்டரீதியான கொவிட் நோயாளர் அறிக்கையின்படி, களுத்துறை மாவட்டத்தில் நேற்று 391 கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய 3 மாவட்டங்களிலும் நேற்று 300க்கும் அதிகமானோர் கொவிட் நோயுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 333 பேருக்கும், கம்பஹாவில் 350 பேருக்கும் கொவிட் 19 நோய்த்தொற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருணாகலையில் 113 பேருக்கும், காலியில் 108 பேருக்கும், மாத்தறை 45 பேருக்கும், கேகாலையில் 170 பேருக்கும், பதுளையில் 47 பேருக்கும், அம்பாறையில் 27 பேருக்கும், மாத்தளையில் 65 பேருக்கும், அனுராதபுரத்தில் 179 பேருக்கும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவில் ஒருவருக்கும், திருகோணமலையில் 24 பேருக்கும், நுவரெலியாவில் 72 பேருக்கும், கண்டியில் 89 பேருக்கும், இரத்தினபுரியில் 63 பேருக்கும், புத்தளத்தில் 56 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 144 பேருக்கும், கிளிநொச்சியில் 28 பேருக்கும் பொலனறுவையில் 25 பேருக்கும், ஹம்பாந்தோட்டையில் 71 பேருக்கும், மொனராகலையில் 39 பேருக்கும், மட்டக்களப்பில் 39 பேருக்கும் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 40 பேருக்கும் கொவிட் தொற்றுறுதியானது. அதன்படி நேற்று நாட்டில் 2, 518 பேருக்கு மொத்தமாக கொவிட் தொற்றுறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No description available.
No description available.No description available.No description available.