மாரடைப்பு காரணமாக அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.