மேல் மாகாணத்தில் நேற்றும் 1000க்கும் அதிகமான தொற்றாளர்கள்

மேல் மாகாணத்தில் நேற்றும் 1000க்கும் அதிகமான தொற்றாளர்கள்

நாட்டில் நேற்றைய தினம் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேல் மாகாணத்தில் 1000 க்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 2 ,456 பேரில் அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இதனடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 677 பேரும், கொழும்பு மாாவட்டத்தில் 320 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 315 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் பியகம பகுதியில் 136 பேர் பதிவாகியுள்ளனர்.

மேலும் குருணாகலையில் 60 பேரும், காலியில் 259 பேரும், மாத்தறையில் 84 பேரும், கேகாலையில் 5 பேரும், பதுளையில் 50,பேரும் அம்பாறையில் 23 பேரும், மாத்தளையில் 46 பேரும், அனுராதரபுரத்தில் 11 பேரும் பதிவாகியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 255 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களில் 254 பேர் புதுக்குடியிருப்பு பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னாரில் 5 பேரும், நுவரெலியாவில் 25 பேரும், கண்டியில் 34 பேரும், இரத்தினபுரியில் 56 பேரும், புத்தளத்தில் 51 பேரும், யாழ்ப்பாணத்தில் இருவரும், கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் தலா 17 பேரும், பொலனறுவையில் 82 பேரும், ஹம்பாந்தொட்டையில் 19 பேரும், மொனராகலையில் 20 பேரும் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 23 பேருக்கு கொவிட்தொற்று உறுதியாகியுள்ளது.

அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நபர்கள் வெளியில் நடமாட முடியும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை மீறிய குற்றத்துக்காக 141 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைதாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்துக்காக 223 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்..

இதன்படி இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்துக்காக 10 ஆயிரத்து 73 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவற்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.