போதைப்பொருட்களுடன் மூவர் கைது

போதைப்பொருட்களுடன் மூவர் கைது

கம்பஹா, களனிமுல்ல பிரதேசத்தில் நேற்று (17) மேற்கொள்ள சோதனை நடவடிக்கைகளின் போது, கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போதைப்பொருட்களை பிறிதொரு நபருக்கு வழங்குவதற்காக சென்ற போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட  விசாரணையின் போது அவர் நீண்ட நாட்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட தகவலுக்கமைய கொச்சிக்கடை - ரத்னம் வீதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 600 மில்லிகிராம் ஹெரோயினும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டியதாக கருதப்படும் 38,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக முல்லேரியா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.