
இங்லீஷ் பிரீமியர் லீக்: எவர்டன் அணியின் ஓன் கோலால் டோட்டன்ஹாம் அணி வெற்றி!
இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் எவர்டன் அணிக்கெதிரான போட்டியில், டோட்டன்ஹாம் அணி வெற்றிபெற்றுள்ளது.
டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் விளையாட்டரங்கில், உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போட்டியின் 24ஆவது நிமிடத்தில் எவர்டன் அணியின் வீரரான மைக்கேல் கேன், டோட்டன்ஹாம் அணிக்கு ஓன் கோலொன்றை அடித்துக் கொடுத்தார்.
மேற்கொண்டு போட்டியின் இறுதிவரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், டோட்டன்ஹாம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை, டோட்டன்ஹாம் அணி 48 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது. எவர்டன் அணி 44 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தில் உள்ளது.