இன்று மொத்தமாக 2, 456 கொவிட் தொற்றாளர்கள்!

இன்று மொத்தமாக 2, 456 கொவிட் தொற்றாளர்கள்!

நாட்டில் இன்று மேலும் 854 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்றைய தினம் 1579 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 23 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று மொத்தமாக 2,456 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 145, 202 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.