14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரம் யூட் வீதி காட்டு பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று (16) மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் 14 கிலோ 175 கிராம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கஞ்சா பொதிகள் சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என தெரிய வந்துள்ளது.
இதன்போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.