95 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது
முகத்துவாரம் போதிய சந்தியில் வைத்து போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தினமான இன்று முச்சக்கர வண்டியொன்றில் வைத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 500 கிராம் ஹெரோயின், 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1 கிலோகிராம் ஹேஸ் போதைப்பொருள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி சுமார் 95 இலட்சம் ரூபா என தெரியவந்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.