தேர்தல் முறைமைகளில் மாற்றம் - அரசாங்கம் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபைகள் தேர்தல் உள்ளிட்ட 4 தேர்தல்களின் முறைமைகளை மாற்றியமைக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு இன்று (17)கூடியது.
இந்த கூட்டத்தின் போது அரசாங்க தரப்பில் இவ்வாறு அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.