இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.