நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில்
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 2,275 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் நேற்று 438 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 410 பேருக்கு தொற்றுறுதியான நிலையில், அவர்களில் அதிகமானோர் பியகம பகுதியில் பதிவாகியுள்ளனர்.
பியகம பகுதியில் நேற்று 173 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
களுத்துறையில் 241 பேருக்கும், குருநாகலில் 100 பேருக்கும், காலியில் 261 பேருக்கும், மாத்தறையில் 46 பேருக்கும், கேகாலையில் 89 பேருக்கும், பதுளையில் 29 பேருக்கும், அம்பாறையில் 38 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
திருகோணமலையில் 13 பேருக்கும். மாத்தளையில் 14 பேருக்கும், அநுராதபுரத்தில் 22 பேருக்கும், வவுனியாவில் 17 பேருக்கும், முல்லைத்தீவில் 24 பேருக்கும், மன்னாரில் 13 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 179 பேருக்கு தொற்றுறுதியான நிலையில், அவர்களில் அதிகமானோர் பொகவந்தலாவ பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய பொகவந்தலாவ பகுதியில் 65 பேருக்கும், கினிகத்ஹேனை பகுதியில் 55 பேருக்கும், நுவரெலியா பகுதியில் 43 பேருக்கும் தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி மாவட்டத்தில் நேற்று 138 பேருக்கு தொற்றுறுதியானது.
இரத்தினபுரியில் 84 பேருக்கும், புத்தளத்தில் 4 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 9 பேருக்கும், கிளிநொச்சியில் 7 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 142,746 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றிலிருந்து இதுவரையில் 118,322 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், தொற்றுறுதியான 23,483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.