தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை திறக்கப்படுகிறது

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை திறக்கப்படுகிறது

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம், பேலியகொடை மெனிங் பொதுசந்தை, பேலியகொடை மீன் சந்தை என்பவற்றை நாளைய தினம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு அவை திறக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுகின்றவர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்கள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன் நாளைய தினம் முதல் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, பொதுமக்களுக்கு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், ஒற்றை இலக்க திகதிகளில் வெளியில் செல்ல முடியும்.

அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை இரட்டை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், இரட்டை இலக்க திகதிகளில் வெளிச்செல்ல முடியும்.

பூச்சியம் எனின் அது இரட்டை எண்ணாக கருதப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.