நுவரெலியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நுவரெலியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் நேற்றைய நாளில் கொவிட்-19 தொற்றுறுதியான 2, 386 பேரில், அதிகமானோர் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளனர்.

173 பேருக்கு அங்கு தொற்றுறுதியானதாக, கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின், நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மாவட்ட ரீதியில், கண்டி மாவட்டத்தில் நேற்றைய நாளில் அதிகமானோருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

338 பேருக்கு கண்டி மாவட்டத்தில் தொற்றுறுதியாகியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 277 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 184 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 321 பேருக்கும், குருநாகல் மாவட்டத்தில் 181 பேருக்கும், காலி மாவட்டத்தில் 82 பேருக்கும் தொற்றுறுதியானது.

மாத்தறை மாவட்டத்தில் 104 பேரும், கேகாலை மாவட்டத்தில் 23 பேரும், பதுளை மாவட்டத்தில் 26 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 41 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 5 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 98 பேரும், வவுனியா மாவட்டத்தில் 10 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 12 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 288 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 94 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 81 பேருக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 33 பேருக்கும் தொற்றுறுதியதாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 11 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 72 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 64 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 பேரும் பதிவாகியுள்ளதாக, கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.