நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள்

நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள்

நாட்டில் நேற்றைய தினம் 2,386 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அவர்களில் புத்தாண்டு கொத்தணியில் 2,371 பேர் பதிவாகியுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 15 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 140,471 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் தொற்றுறுதியான 1,352 பேர் நேற்று (15) குணமடைந்தனர்.

இதன்படி, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 117,220 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், 22,310 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.