நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமை சப்ரகமுவ,மத்திய,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு,வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.