மீண்டும் அமெரிக்க டொலருக்கு எதிராக வீழ்ந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!

மீண்டும் அமெரிக்க டொலருக்கு எதிராக வீழ்ந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையானது நேற்றைய தினம் மீண்டும் 202 ரூபாயை தாண்டி சென்றுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருந்த அந்நிய செலாவணி விகிதத்திற்கு அமைய நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.2802 ரூபாயாக காணப்பட்டது.

கொள்முதல் விலை 197.3841 ரூபாயாக இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையானது 199 ரூபாய் மட்டத்தில் காணப்பட்டது.