மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் (படங்கள்)
நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் கொள்வனவாளர்கள் வராத காரணத்தினால், கொழும்பு மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் சிக்கலான நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை வரை நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளபோதிலும், மெனிங் சந்தை, பேலியகொடை மீன் சந்தை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்களை மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், இன்று (14) காலை முதல் விவசாயிகளும், வர்த்தகர்களும் சந்தைக்கு வந்துள்ளபோதிலும், மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதற்கு, கொள்வனவாளர்கள் வரவில்லை என மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.




