நோன்பு பெருநாள் இன்று!
முஸ்லிம்கள் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால், இன்றைய தினம் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுவதற்கு, கொழும்பு பெரிய பள்ளவாசலில் நேற்று முன்தினம் கூடிய பிறைகுழு ஏகமனதாக தீர்மானித்தது.
இதேவேளை, கொவிட்-19 பரவல் காரணமாக ரமழான் பண்டிகையான இன்று, முஸ்லிம் பள்ளிவாசல்களில் தொழுகைகளை நடத்த வேண்டாம் என முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வஃப்பு சபையின் உத்தரவிற்கு அமைய இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் பள்ளிவாசல்களை திறக்காதிருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
ரமழான் பண்டிகையன்று பயணங்களை மட்டுப்படுத்தி வீடுகளில் தமது குடும்ப உறுப்பினர்களுடன் தொழுகைகளை மேற்கொண்டு பண்டிகையை கொண்டாடுமாறும் முஸ்லிம் பாண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.