இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

தற்போது இலங்கைவந்து தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வகையான விசாவின் செல்லுபடியாகும் காலம் மேலும் 60 நாட்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மே 11 ஆம் திகதியிலிருந்து  ஜுலை 9 ஆம் திகதிவரையான 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியினுள் காலாவதியாகும் விசாக்களுக்கு, அதற்கான கட்டணம் மாத்திரமே அறவிடப்படும் என்றும், மேலதிகமாக அபராதங்கள் எவையும் அறவிடப்படமாட்டாது எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.