9 பில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்கள் மீட்பு!
மீள் ஏற்றுமதி செய்வதாக கூறி சட்ட விரோதமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 பில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
21 கொள்கலன்களின் ஊடாக 200 மில்லியன் வெளிநாட்டு சிகரெட்டுக்களே இவ்வாறு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது சர்வதேச வர்த்தகமா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த்தனர்.