தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் சேவைகள் மீள ஆரம்பம்!
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது.
E-channelling சேவையினூடாக முன்கூட்டியே நேர ஒதுக்கீடு செய்கொண்டவர்களுக்கு மாத்திரமே சேவை வழங்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் சவேந்திர கமகே இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், நுவரெலியா, பொலன்னறுவை, களுத்துறை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மேற்படி சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.