களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புளத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்தை, வலல்லாவிட்ட, இங்கிரிய, மத்துகம மற்றும் தொடங்கொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை முற்பகல் 11 மணிவரையில் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.