வடக்கில் நேற்று 82 பேருக்கு கொவிட் தொற்றுறுதி!
வடக்கு மாகாணத்தில் மேலும் 82 பேருக்கு நேற்று (12) கொவிட்-19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடம் என்பவற்றில் 977 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 67 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேரும் வவுனியா மாவட்டத்தில் 4 பேரும் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.