நபர் ஒருவரின் உயிரை காவுகொண்ட வாகன விபத்து!
களுவாஞ்சிகுடி - குருக்கள்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர்.
பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்த மேலும் இருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பெரியகல்லாறு பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததுடன் பேருந்தின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.