அத்தியாவசிய கடமைகளுக்கு செல்பவர்களுக்காக விசேட தொடருந்து சேவை!

அத்தியாவசிய கடமைகளுக்கு செல்பவர்களுக்காக விசேட தொடருந்து சேவை!

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய கடமைகளுக்கு செல்லும் பயணிகளுக்காக தொடருந்து சிலவற்றை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை தொடருந்து சேவை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதற்கமைய, உப தொடருந்து நிலையங்கள் தவிர்ந்த ஏனைய பிரதான தொடருந்து நிலையங்களில் மாத்திரம் இந்த தொடருந்துகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருந்தில் பயணிக்கவிருப்பவர்கள், தமது அத்தியாவசிய கடமைக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் நிறுவன பிரதானிகளால் வழங்கப்பட்ட அத்தாட்சி என்பவற்றை உறுதிப்படுத்தல் வேண்டும் என தொடருந்து சேவைகள் தெரிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையடுத்து, மாகாணங்களுக்கு மாத்திரம் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதுடன், தூர இடங்களுக்கான தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டது.

இதனால் அத்தியாவசிய கடமைகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டே இந்த விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து சேவைகள் தெரிவித்துள்ளது.