ஹட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஹட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஹட்டன் - எபோட்சிலி மாக்ஸ் பிரிவில் காணாமல் போன நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் இன்று (12) காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர் நேற்று (11) காலையில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில் அவரை தேடும் நடவடிக்கையில் தோட்ட மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

அதற்கமைய விடுதில் இருந்து 100 மீற்றர் தொலைவில் குறித்த நபரின் சடலம் இன்று (12) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் - எபோட்சிலி தோட்டப் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய 05 பிள்ளைகளின் தந்தையான சின்னையா குமார் என்பரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தில் உயிரிழந்தாரா?என்பது தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.