நேற்று மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 606 பேருக்கு கொவிட்-19

நேற்று மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 606 பேருக்கு கொவிட்-19

நாட்டில் நேற்றைய தினம் தொற்று உறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக கொவிட்-19 தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 606 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

கொழும்பு -15 மட்டக்குளி சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 53 பேரும், முல்லேரியா சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவில் 40 பேரும் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 300 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 417 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவில் மாத்திரம் நேற்று 102 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதவிர குருநாகல் மாவட்டத்தில் 196 பேருக்கும், காலி மாவட்டத்தில் 148 பேருக்கும், மாத்தறையில் 36 பேருக்கும், பதுளையில் 29 பேருக்கும், அம்பாறையில் 27 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன் அநுராதபுரத்தில் 90 பேரும், திருகோணமலையில் 23 பேரும், முல்லைத்தீவில் 24 பேரும், நுவரெலியாவில் 64 பேரும், வவுனியாவில் 5 பேரும் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.