கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது

கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரை பலகையை கொண்ட வாகனமொன்றில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருளுடன் கொண்டுச் சென்ற சந்தேக நபர்கள் நால்வர் மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமான குறித்த வாகனத்திலிருந்து ஒருத்தொகை கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளொன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.