இன்றைய வானிலை

இன்றைய வானிலை

நாட்டில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழைப் பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.

அதேவேளை சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.