நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம் மாவட்ட வாரியாக
நாட்டில் நேற்றைய தினம் பதிவான கொவிட்-19 தொற்றாளர்களில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்மாவட்டத்தில் நேற்று 551 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் திவுலபிட்டிய பகுதியில் 120 பேரும், சீதுவையில் 63 பேரும், கட்டானை பிரதேசத்தில் 58 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் நேற்றைய தினம் 362 பேருக்கும், கொழும்பு மாவட்டத்தில் 321 பேருக்கும், கொவிட்-19 தொற்றுறுதியானது.
நுவரெலியா மாவட்டததில் 184 பேரும், குருணாகலையில் 177 பேரும், காலியில் 170 பேரும், இரத்தினபுரியில் 128 பேரும், யாழ்ப்பாணத்தில் 109 பேரும் தொற்றுக்கு உள்ளானதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(10) அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் விபரம்:


