கிளி. பாரதிபுரத்திலும் இடைக்கால சிகிச்சை மையம்

கிளி. பாரதிபுரத்திலும் இடைக்கால சிகிச்சை மையம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் பாரதிபுரம் தனிமைப்படுத்தல் நிலையத்தை அனைத்து அவசர மருத்துவ வசதிகள் மற்றும் வைத்திய நிபுணர்கள் சகிதம் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினர் மாற்றி அமைத்துள்ளனர்.

கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சில நாட்களில் இராணுவத்தால் மேம்படுத்தப்பட்ட இடைக்கால சிகிச்சை மையம், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவின் நேரடி மேற்பார்வையில் கீழ் இடம்பெற்றுள்ளது.