நாட்டில் கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இதன்படி கொவிஷீல்ட் முதலாவது தடுப்பூசி இதுவரை 925,242 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 196,546 பேருக்கு அதன் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் சினோபாம் முதலாவது தடுப்பூசி இதுவரை 6,034 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு அதன் இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது.

அதேநேரம் 4,381 பேருக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் மாத்திரம் 1,385 பேருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.