60 மில்லியன் ரூபா கொக்கேய்ன் உடன் கைதான நபரை தடுப்பு காவலில் விசாரிக்க அனுமதி

60 மில்லியன் ரூபா கொக்கேய்ன் உடன் கைதான நபரை தடுப்பு காவலில் விசாரிக்க அனுமதி

சுமார் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 கிலோ 29 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட தென்னாபிரிக்க பிரஜையை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீர்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கென்யா – நைரோபி நகரில் இருந்து நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குறித்த தென்னாபிரிக்க பிரஜை பிரவேசித்திருந்தார்.

இதன்போது அவரின் பயணப்பையை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த கொக்கேய்ன் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டிருந்தது.