இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக்கடன்
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்குவதற்கான உடன்படிக்கையில் கொரிய எக்ஸிம் வங்கி கைச்சாத்திட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
40 வருட மீள் செலுத்துகை கால அவகாச அடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.