
கடந்த 12 மாதங்களில் கொழும்பு பங்குசந்தை பாிவர்தனை நடவடிக்கை சிறந்த முறையில்!
கடந்த 12 மாதங்களில் கொழும்பு பங்கு சந்தை பரிவர்தனை நடவடிக்கைகள் சிறந்த முறையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பங்கு சுட்டெண் மெச்சத்தக்க வகையில் பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளன.
சராசரியாக நாளாந்த விற்றுமுதல் 4.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு 1.8 பில்லியன் ரூபாவாகவே பதிவாகியிருந்தது.
அதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்களில் பணியாற்றுபவர்களுக்கு பங்கு சந்தை தொடர்பான விடயங்கள் குறித்து உயர்மட்ட அறிவினை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக வெளிவிவகாரத்துறை அமைச்சும், கொழும்பு பங்கு சந்தையும் இணைந்து மெய்நிகர் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளன.
இதன் மூலம் கொழும்பு பங்கு சந்தை பரிவர்தனை நடவடிக்கைகளில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்களை ஈர்க்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.